தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அலுவலர் நியமனம்..!!

பெரும் பரபரப்புக்கு இடையே நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க சிறப்பு அலுவலராக பி.வி. கீதா நியமிக்கப்பட்டுள்ளார்.

 தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் தீர்ப்பு வரும்வரை, சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க சிறப்பு அலுவலர் ஒருவரை அரசு நியமித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஜூன் மாதம் பெரும் பரபரப்புக்கு இடையே நடைபெற்றது. தேர்தலின் முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

SOUTH INDIAN FILM ACTOR ASSOCIATION SPECIAL OFFICERS APPOINTED GOVT

இதையடுத்து தற்போது நடிகர் சங்க விவகாரங்களை நிர்வகிக்க சிறப்பு அலுவலர் ஒருவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். அதன்படி பதிவுத் துறையின் துணை ஆய்வாளராக பணியாற்றிவரும் பி.வி. கீதா சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Image result for ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

மேலும், இவர் நடிகர் சங்கத் தேர்தலின் தீர்ப்பு வெளியாகும் வரையில் அல்லது நவம்பர் 6ஆம் தேதியிலிருந்து ஒரு வருட காலம்வரை மட்டுமே இந்தப் பணியை மேற்கொள்வார் என்றும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *