இராணுவ வீரரா..? டிரக் டிரைவரை கொன்ற பிரிவினைவாத கும்பல்…!!

காஷ்மீரில் இராணுவ வீரர்கள் என்று டிரக் டிரைவரை  போராட்டகாரர்கள் கல் எறிந்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சட்டத்தை இரத்து செய்ததை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் இருந்து வருகின்றது. தொடர்ந்து அங்கே இராணு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு_வில் சில இடங்களில்  இயல்பு நிலை திரும்பினாலும்  அங்கே கல்வீச்சு சம்பவமும் , போராட்டமும் , வன்முறையும் நடைபெற்று வருகின்றது.  இந்நிலையில், நேற்று இரவு  அங்குள்ள தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெராவில் இரவு 8 மணிக்கு ஒரு டிரக்கை நோக்கி போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்.

காஷ்மீரில் கல்வீச்சு தாக்குதல்... ராணுவ வீரர் என நினைத்து டிரக் டிரைவரை கொன்ற கும்பல்

இதில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான அந்த டிரக் டிரைவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். விசாரணையில் இவர் ஜிராதிபோரா உரன்ஹால் பகுதியைச் சேர்ந்த நூர் முகமது என்பது தெரியவந்தது.மேலும்  ராணுவ வாகனம் என்று நினைத்து போராட்டக்காரர்கள் அவர் மீது கற்களை வீசி தாக்கியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.