அச்சச்சோ..! இளம்பெண்களைக் தாக்கும் அரிய வகை நோய்… உஷாரய்யா உஷாரு…!!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 30 வயதான எல்லே ஆடம்ஸ் என்ற இளம் பெண் கடந்த 2020-ம் ஆண்டு முதல் சிறுநீர் கழிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டுள்ளார். இதனால் எல்லே மருத்துவமனையக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீர்ப்பையில் ஒரு லிட்டர் சிறுநீர் தேங்கி இருப்பதாக கூறியுள்ளனர். பொதுவாக பெண்களின் சிறுநீர்ப்பையில் 500 மில்லியும், ஆண்களின் சிறுநீர்ப்பையில் 700 மில்லியும் இருக்கும். ஆனால் அந்த இளம் பெண்ணின் சிறுநீர்ப்பையில் ஒரு லிட்டர் சிறுநீர் இருந்துள்ளது. அந்தப் பெண் சிறுநீர் கழிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் அந்த பெண்ணுக்கு ஃபோலர்ஸ் சிண்ட்ரோமால் என்ற அரிய வகை நோய் இருப்பது தெரிய வந்தது.

இந்த நோய் குறிப்பாக இளம் பெண்களை தாக்குமாம். சிறுநீரை வெளியேற்றுவதற்கு ஒரு அவசர வடிகுழாயை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். அந்த வடிகுழாய் சிறுநீர்ப்பையில் செலுத்தப்பட்டது. இருப்பினும் இளம் பெண்ணின் பிரச்சனை சரியாகவில்லை. இந்த சிறுநீர் குழாயை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக இளம் பெண் பயன்படுத்திய பிறகு தான் அவருக்கு அரியவகை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அரியவகை நோய் பிரச்சினையில் இருந்து இளம்பெண் தப்பிக்க சிறுநீர்ப்பை மற்றும் குடல் பிரச்சினைகளுக்கு உதவக்கூடிய சாக்ரல் நர்வ் ஸ்டிமுலேஷன் மட்டும்தான் ஒரே வழி என்று கூறப்பட்டது. இதை செய்த பிறகு தற்போது இளம் பெண்ணின் வாழ்க்கை ஓரளவு சுமூகமாக இருக்கிறது. மேலும் இந்த தகவலை அந்த பெண் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.