அ – அரசியல் மாற்றம்…. ஆ – ஆட்சி மாற்றம் …. இ – இப்போ இல்லனா எப்பவும் இல்ல ….. ரஜினின் அலை தொடங்கியது ….!!

மக்களுக்கு அரசியல் எழுச்சி வர வேண்டும், பின்னர் நான் அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

கடந்த 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் ? கட்சியின் பெயரை அறிவிப்பார் ? என்றெல்லாம் எதிர்பார்த்திருந்த நிலையில் அரசியல் மாற்றும் ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று கூறி ஒரு எழுச்சி மக்களிடம் ஏற்பட்ட பிறகுதான் அரசியல் வருவேன் என அவர் வைத்துள்ள 3 திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.

ரஜினியின் இந்த கருத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதியையும் சென்றடைந்தது. பெரியவர்கள் , முதியோர்கள் , இளைஞர்கள் , சிறுவர்கள் , பெண்கள் , வணிகர்கள் என அனைத்து தரப்பினரிடையே ரஜினி சொன்ன ஒரு அலை உருவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் இப்போ இல்லனா எப்பவும் இல்ல என்று போஸ்டர்கள் ஒட்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ரஜினியின் திட்டங்களுக்கு மக்களிடையே பெருத்த வரவேற்பு என்பது கிடைத்துள்ளது. கல்லூரில் விடுமுறைக்கு முன்பு பெரும்பாலான கல்லூரி வழக்கத்திற்கு முன்பு மாணவர்களே களத்தில் இறங்கி நோட்டீஸ் கொடுத்து ரஜினி சொன்ன அலையை உருவாக்கி வருகின்றனர். அனைத்து தரப்பு மக்களிடமும் ரஜினி சொன்ன அலை உருவாக்க தொடங்கி விட்டது. இதை மெய்ப்பிக்கும் வகையில் நெல்லை சிறுவர்களின் வீடியோ வைரலாகி வருகின்றது.

சிறுகுழந்தைகள் மத்தியும் அலையை உருவாக்க வேண்டுமென்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களால் மட்டுமே முடியும். திமுக , அதிமுகவுக்கு சரியான மாற்று ரஜினி அவர்களின் திட்டங்கள் தான் என்பதை மக்களுக்கு , பெற்றோர்களுக்கு உணர்த்தும் வகையில் சிறுவர்கள் , குழந்தைகள் ரஜினி திட்டத்தை சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

நாம் அனைவரும் அ – அம்மா , ஆ – ஆப்பிள் , இ – இயல் என்பதை மாற்றி அ – அரசியல் மாற்றம் , ஆ – ஆட்சி மாற்றம் , இ – இப்போ இல்லனா எப்பவும் இல்ல என்று அந்த சிறுவன் சக குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கும் வீடியோ சமூகவலைத்தளத்தில் டிரெண்டிங் ஆகி கொண்டு இருக்கின்றது. மொத்தத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்றால் அது ரஜினியின் திட்டத்தால் மட்டுமே முடியும் என்பதற்கு ரசிகர்களின் களப்பணி சிறந்த உதாரணம்.