இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது..! மருந்தகம் ஒன்றில் ஊழியர் செய்த மோசமான செயல்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

கனடாவில் மருந்தகம் ஒன்றில் ஊழியர் ஒருவர் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளரும் நாடுகளில் ஒரு காலத்தில் ஊசி போடுவதற்காக உபயோகிக்கப்படும் சிரிஞ்சை கழுவி கொதிக்கவைத்து கிருமி நீக்கம் செய்த பின்னரே மற்றொரு நோயாளிக்கு மீண்டும் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் கனடா நாட்டில் உள்ள New Westminster எனும் மருந்தகம் ஒன்றிற்கு Corinn Jockisch (35) என்னும் பெண் தனது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்துவதற்காக சென்றுள்ளார். ஆனால் அந்த New Westminster மருந்தகத்தில் வேலை செய்த ஊழியர் ஒருவர் பலருக்கும் ஒரே தடுப்பூசியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் Corinn Jockisch எனும் அந்தப் பெண்ணுக்கு எச்ஐவி, மஞ்சள்காமாலை உள்ளிட்ட தொற்று ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காக மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் அந்த மருந்தகத்தில் இனி தடுப்பூசி வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த New Westminster மருந்தகத்தில் பணியாற்றிய ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அதிகாரிகள் பலரும் அந்த மருந்தகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் அனைவரையும் ரத்த பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்ல வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடதக்கது ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *