தமிழகத்தில் கோடை காலங்களில் மின் தேவையை சமாளிக்க புதிய திட்டம்… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அதிக அளவிலான மின்சார தேவை இருக்கிறது. இது குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 17,196 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டதாகவும், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 18,053 மெகாவாட் உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் இன்னும் கூடுதலாக 18,500 வரைக்கும் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் மின்சார தேவை எவ்வளவு அதிகரித்தாலும் அதனை சமாளிக்கும் விதமாக மின்வாரியம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் கூடிய விரைவில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான ஒப்பந்த புள்ளி கோரப்படும். தமிழகத்தில் 100 இடங்களில் மின் வாகனங்களுக்கு சார்ஜ் செய்து கொள்வதற்கான நிலையங்கள் உருவாக்கப்படும். அதற்கான இறுதி கட்டப் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் ஏப்ரல் மாதத்திற்குள் அது  அமலுக்கு வரும் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply