“தலைவர் பதவிக்கு சரியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் “காங்கிரஸ் மூத்த தலைவர் அறிவுரை ..!!

தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தால் சரியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி அறிவுரை வழங்கியுள்ளார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தோல்விக்கான பொறுப்பை ஏற்று பல மாநிலங்களில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுக்கான தலைவர் பதவியை ராஜினாமா செய்து கொண்டனர்.

Image result for rahul gandhi

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கான பொறுப்பை ஏற்று தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதற்கு ஸ்டாலின் ,ரஜினி உட்பட பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும்  எதிர்ப்பு தெரிவித்து அவரை பதவி விலக வேண்டாம் என்று  வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் அவர் கூறியதாவது, தோல்விக்காக பொறுப்பை ஏற்று காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலக விருப்பப்பட்டால் , தலைவர் பதவிக்கு ஏற்ற சரியான நபரைத் தேர்ந்தெடுத்து அவரிடம் ஒப்படைக்க  வேண்டும் என்று கூறியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *