கால் கடோட் மிரட்டும் ‘வொண்டர் வுமன் 1984’ – டிரெய்லர் வெளியீடு..!!

கால் கடோட் நடிக்கும் ‘வொண்டர் வுமன் 1984’ டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

2009இல் வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஹாலிவுட் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கால் கடோட். இஸ்ரேல் மாடல் அழகி, மிஸ் இஸ்ரேல் என்ற அடையாளத்துடன் ஹாலிவுட் திரையுலகில் தடம்பதித்த இவர், பேட்மேன் v சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் திரைப்படம் மூலம் புகழ் பெற்றார். கிரிமினல், திரிப்பிள் 9, வொண்டர் வுமன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார்.

Image result for Actress Gal Gadot

 இந்த நிலையில், வொண்டர் வுமன் பட வரிசையில் தற்போது ‘வொண்டர் வுமன் 1984’ என்ற பிரமாண்ட சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் 2 நிமிட டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. தங்க கவசத்திலான உடை தரிந்து சீறிப்பாயும் காட்சிகள் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

Wonder women

இந்தப் படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குநர் பாட்டி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். டிசி பிலிம்ஸ், அட்லஸ் என்டர்டெய்ன்மெண்ட், தி ஸ்டோன் குவாரி, டென்சன்ட் பிக்சர்ஸ், பிரான் ஸ்டுடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

Image

1984ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் போன்று இப்படம் உருவாகிவருகிறது. மேலும், ‘வொண்டர் வுமன் 1984’ படம் அடுத்த ஆண்டு ஜுன் 5ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *