“விமானத்தை அருகில் பார்க்க ஆசை” ஏர்போர்ட்டுக்குள் விமானத்தை நோக்கி ஓடிய வாலிபரால் பரபரப்பு..!!

மும்பை விமான நிலையத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் விமானத்தை நோக்கி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மும்பை விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் நேற்று பிற்பகல் புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமான நிலையத்தின் பின்புறம் உள்ள குடிசைப் பகுதியிலிருந்து 27 வயதான வாலிபர் ஒருவர் புறப்பட இருந்த விமானம் அருகே வந்து நின்றார்.

Mentally challenged man held for trespassing at Mumbai airport

அவர் தலையில் வெள்ளை கலர் கர்ச்சீப் கட்டியிருந்தார். பின்னர் அவர் ஓடுபாதை 27-ல்  நின்ற விமானத்தை நோக்கி சென்று போய் நின்று அங்குமிங்கும் பார்த்தபடி போஸ் கொடுத்தார். இதையடுத்து விமான பாதுகாப்பு படையினர் உடனே விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

Image result for A 22-year-old man scaled the perimeter wall of the Mumbai airport and walked towards the main runway as a SpiceJet aircraft was waiting in a ...

அப்போது அவர் விமானத்தை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை அதனால்தான் ஓடி வந்தேன் என்றார். இதையடுத்து போலீசார் அவரது குடும்பத்திற்கு தகவல் கொடுத்தனர் இதன் அதன்பின் விரைந்து வந்த குடும்பத்தினர் போலீசாரிடம் அவர்  மனநிலை சரியில்லாதவர் என்றும் அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் கூறினார். அதற்கான மருத்துவச் சான்றிதழை கொடுத்ததையடுத்து போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.