குன்னூரில் அவலம் !!!ஒரு குடம் தண்ணீர் 10ரூபாய் …குடிநீர்த்தட்டுப்பாட்டின் எதிரொலி !!!!

குன்னூரில் நீர்த்தட்டுப்பாட்டின் காரணமாக பொதுமக்கள் ஒரு குடம்தண்ணீர் 10ரூபாய் கொடுத்துவாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.   

நீலகிரி மாவட்டம், குன்னூரில் மிக முக்கியமான  நீராதாரமாக  ரேலியா அணை, விளங்கி வருகிறது .இதில் தற்போது 32 அடிக்கு நீர் குறைந்துள்ளதால் , 4 தடுப்பணைகளில் இருந்து குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு  வருகிறது. ஆனால் தற்போது  இந்த அணைகளிலும் , போதுமான அளவு  தண்ணீர் இல்லாததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இதனால், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே  குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

water pipe line breakage க்கான பட முடிவு

இதனால் தற்போதுகுன்னூரில் உள்ள 30 வார்டு பொதுமக்களும்  ”ஒரு குடம் தண்ணீருக்கு 10 ரூபாய் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவலநிலை” ஏற்பட்டுள்ளது .பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து வீணாவதே இதற்கு முக்கிய காரணம் . அதனால் , சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய  நடவடிக்கை எடுத்து குடிநீரை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.