தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

Related image

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி,  தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, விருதுநகர் மற்றும் நெல்லை போன்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும. காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.