இஷ்டம்போல மருந்து கொடுத்த போலி செவிலியர்! 900 நோயாளிகளை ஏமாற்றிய அதிர்ச்சி!!

கனடா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் போலி செவிலியராக இருந்து சுமார் 900 நோயாளிகளை ஏமாற்றியுள்ளார். 51 வயதாகும் போலி செவிலியர் நோயாளிகளை ஏமாற்றியுள்ளது அதிர்ச்சி செய்தியாக இருக்கிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் பெண்கள் மருத்துவமனை ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

எனவே நோயாளிகளை ஏமாற்றி செவிலியராக சேவை வழங்கிய பெண்ணுக்கு எதிராகவும் மேலும் முறையாக அந்த பெண் குறித்தும் அவரின் கல்வி தகுதி குறித்து ஆய்வு செய்யாமல் வேலைக்கு வைத்ததால் மருத்துவமனை மீதும் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனால் இப்பெண் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு வரை சிகிச்சை செய்த நபர்கள் குறித்த தகவல்களை நீதிபதி ஆய்வு செய்து வருகின்ற பிப்ரவரி 22 ஆம் தேதி இப்பெண் செய்ததற்கான குற்றத்திற்கான தண்டனை வழங்கப்படும் என்று வழக்கை தள்ளி வைத்தார்.