ஒடிந்து போன கை…. மலர்ந்த தாமரை…. காங்கிரஸ் அரசுக்கு கெடு…. !!

மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கின்றது.

மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்ததன் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். மேலும் இவர் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்து கர்நாடகாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசின் பலம் பாஜகவை விட கீழ் சென்றது. 231 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச பேரவையில் காங்கிரஸ் கட்சி , கூட்டணி கட்சிகளை இணைத்து 114 இடங்களுடன் ஆட்சி நடத்தி வந்தது. எதிர்க்கட்சியான பாஜக 107 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது.

jyotiraditya scindiaக்கான பட முடிவுகள்

சமீப காலமாக நிகழ்ந்து வந்த அரசியல் பரபரப்பால் 22 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததையடுத்து காங்கிரஸ் கட்சியின் பலம் 92ஆக குறைந்துள்ளது. இதனால் ஆளும் கமல்நாத் அரசுக்கு இருந்த பெரும்பான்மை இழந்து ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து ஆளுநரை சந்தித்த கமல்நாத் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோரி இருந்தார். பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகருக்கு யாரும் உத்தரவிட முடியாது என ஆளும் காங்கிரஸ் தெரிவித்து வந்தது.

சிவராஜ் சவுகான் கமல்நாத்க்கான பட முடிவுகள்

இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்ற போது மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு இன்று (20.3) மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்றும், அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள்  நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றால் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய பிரதேச மாநில DGP-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் ஆளும் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து பாஜகவின் புதிய அரசு அமைவதற்கான வாய்ப்புள்ளது.