கேரளாவில் வசிக்கும் 4 வயது சிறுமி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் சிறுமி தனது ஐ-லைனர் திறன்களை வெளிப்படுத்தி உள்ளார். இது பயனர்களை மிகவும் கவர்ந்ததுள்ளது. அந்த சிறுமி தனது கண் புருவங்களை உயர்த்துவதையும், மேக்கப் முடிந்தவுடன் அழகாக சிரிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோ வைரலான நிலையில், டெல்லியைச் சேர்ந்த பிரபல பாடகியான சுனிதா சவுகான் அதேபோன்று ஒரு வீடியோவை எடுக்க ஆசைப்பட்டார். அதன்படி சிறுமி செய்த செயலை திரும்ப செய்தார். அந்த சிறுமி ஐ-லைனர் போடுவதை போன்று பாடகியும் செய்கிறார். இந்த வீடியோவுடன் சுனிதா சவுகானின் பதிவில் கூறி இருந்ததாவது, அவள் ஒப்புதல் அளிப்பாள் என்று நம்புகிறேன் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு வைரலான நிலையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நடிகர் மெய்யாங் சாங், பாடகி ஜாஸ்மின் சான்டல்ஸ் உள்ளிட்ட பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
View this post on Instagram