எகிறி குதித்து வாலிபால் விளையாடும் நாய்… அசந்து போன இணையவாசிகள்… தீயாக பரவும் வீடியோ!

நார்வே நாட்டின் ஆம்லி பகுதியில் 3 வயதுடைய நாய் ஒன்று தனது உரிமையாளருடன் அழகாக கைப்பந்து விளையாடும் காட்சி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. நார்வே நாடும்  ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். பலர் பொழுதை போக்கும் வகையில் வீட்டிற்குள்ளேயே செல்லப்பிராணிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், ஆம்லியில் வசித்துவரும் கைப்பந்து ஆட்டக்காரரான மத்தியாஸ் பெர்ன்ட்சன் என்பவர் தனது 3 வயது செல்ல நாயுடன் கைப்பந்தாட்டம் (vollyball) விளையாட முடிவு செய்துள்ளார். அதன்படி நாயுடன் தானும் இணைந்து ஒரு பிரிவாகவும், எதிரணியினர் இருவர் மற்றொரு பிரிவாகவும் வாலிபால் விளையாடியுள்ளனர்.

அப்போது எதிரணியினர் அடித்த பந்தை அந்த நாய் எகிரி தடுத்து தனது உரிமையாளருக்கு அனுப்பும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த இணையவாசிகள் அசந்து போய் விட்டனர். பலரும் நாயை பார்த்து வியந்து பாராட்டி பல்வேறு விதமாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.. நீங்கள் வாலிபால் பிளேயராக இருந்தால் இந்தநாய்எப்படிவிளையாடுகிறது என்பதை சொல்லுங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *