12_ஆம் வகுப்பு மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆட்டோ ஓட்டுனரை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் அருகே உள்ளது சிலமலை கிராமம். இங்கு உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12_ஆம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவியை அவரின் வீட்டின் அருகே உள்ள 23 வயதான ஆட்டோ ஓட்டுநர் தங்கபாண்டி என்பவர் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று பல முறை பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவியின் பெற்றோர் கூலி வேலை செய்வதால் வீட்டில் இல்லாத சூழ்நிலையில் சிறுமி கவனிக்க நேரமின்றி இருந்துள்ளார்.

பின்னர் மாணவியின் தாயார் மாணவியை பார்த்து எங்கு சென்றாய் எனக் கேட்கும்போது மாணவி நடந்தவற்றைக் கூறினார். அதியர்ச்சியடைந்த மாணவியின் தயார் உடனடியாக போடி தாலுகா காவல் துறையினர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் ஆட்டோ ஓட்டுநர் தங்கபாண்டியை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்து மாணவியை காப்பகத்தில் சேர்த்தனர்.