“கத்திரி கோலால் 10-ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை” மற்றொரு மாணவன் கைது..!!

கொடைக்கானலில் உள்ள ஒரு பள்ளியில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன்  கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோல்ப்  கிளப் அருகே பவான்ஸ் காந்தி வித்யாஸ்ரம் எனும் தனியாக உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவர்களுக்கிடையே நேற்றிரவு திடீரென வாய் தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியது.

Image result for Kodaikanal School Murder

இதில் ஆத்திரம் அடைந்த ஒரு மாணவன் மற்றொரு மாணவனான கபில் ராகவேந்திராவை கத்திரிக்கோலால் கழுத்தில் குத்தியது  அதுமட்டுமில்லாமல்  அங்கிருந்த கிரிக்கெட் மட்டையால் பலமாக தாக்கியுள்ளான். இதில் அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான். இதையடுத்து கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த மாணவனை  கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.