
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கருப்பு நிற கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரின் முன் பக்கத்தில் 10 வயதான சிறுவன் ஒருவன் அமர்ந்திருக்கிறார். ஓட்டுநர் சிறிதும் பயமின்றி அந்த காரை இயக்குகிறார். இதனை மற்றொரு காரில் அமர்ந்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு இந்த வீடியோ காவல்துறையினர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இப்படி பொறுப்பற்ற செயலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கைது செய்யப்படுவார்கள் என்றும், இது போன்ற குற்றங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.
#WATCH | ये खतरनाक स्टंट वाला वीडियो राजस्थान के झालावाड़ का बताया जा रहा है। आरोपी ने मासूम बच्चे को कार के बोनट पर बैठाया और सड़क पर तेज गाड़ी दौड़ाई। ऐसा उसने रील बनाने के चक्कर में किया। घटना का वीडियो वायरल हुआ तो पुलिस हरकत में आई और उसे अरेस्ट कर लिया गया। pic.twitter.com/KRLvC5fZhX
— Hindustan (@Live_Hindustan) December 26, 2024