டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹைஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. உறவுகளின் சிக்கல்களையும் நகைச்சுவையையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், வருகிற ஜூன் 5-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
மேலும் ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு, 74 வயதில் டேவிட் தவான் மீண்டும் இயக்குநராகக் களமிறங்கியுள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த விழாவில், படத்தின் நாயகிகளான மிருணாள் தாக்கூர் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் அதீத கவர்ச்சியுடன் கலந்துகொண்டு அனைவரையும் மிரள வைத்தனர்.
இந்நிலையில் அவர்களது ஸ்டைலான மற்றும் கவர்ச்சிகரமான தோற்றம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது. நடிகைகளின் இந்த கண்கவர் வருகை, விழா மேடையிலும், இணையதளங்களிலும் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
