மதுரை அருகே அய்யாபட்டி பகுதியில் இன்று நடந்த கொடூர கார் விபத்தில் 3 பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, மதுரை மாவட்டம், அய்யாபட்டி அருகே அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டு சுவரில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர மோதலில் காரில் பயணம் செய்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொட்டாம்பட்டி காவல்துறையினர், விபத்தில் பலியானவர்களின் உடல்களைக் கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
