தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், இன்று திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “முதலமைச்சர் விஜய் அவர்களைச் சந்தித்து எனது வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் களத்தில் நிலவிய அரசியல் மோதல்களைத் தாண்டி, புதிய முதல்வருக்குத் தனது அனுபவத்தின் அடிப்படையில் ஆலோசனைகளை வழங்கிய ஸ்டாலினின் செயல் அரசியல் நாகரிகத்தின் உச்சமாகக் கருதப்படுகிறது.

இந்தச் சந்திப்பின் போது உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார். ‘பகை’ மறந்து பாசத்தோடு நடந்துகொண்ட இந்த மெகா சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.