ஐபிஎல் 2026 தொடருக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்து விவாதிக்க பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் ஒரு முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளது. தர்மசாலாவில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், வீரர்கள் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ் பதிவிடுவது குறித்த புதிய கட்டுப்பாடுகள் பற்றி விளக்கப்பட உள்ளது.

குறிப்பாக, தனது வ்லாக் மற்றும் ரீல்ஸ் மூலம் 60 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களைக் கவர்ந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்களுக்கு, இந்த புதிய பிசிசிஐ விதிகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட வாய்ப்புள்ளது.

ஹோட்டல் அணுகல், விருந்தினர்களுடனான உரையாடல், புகைபிடித்தல் தொடர்பான விதிகள் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடுகள் எனப் பல அம்சங்கள் இந்த புதிய வழிகாட்டுதலில் இடம்பெற்றுள்ளன.

இனிவரும் காலங்களில் வீரர்கள் மற்றும் அணி தொடர்பான வீடியோக்களை தனிப்பட்ட கணக்குகளில் பகிர்வதை விட, அதிகாரப்பூர்வ அணிப் பக்கங்களின் மூலமாகவே வெளியிட முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனத் தெரிகிறது.

 

“>

இந்த விதிகளைப் புரிந்து கொண்டதற்கான உறுதிமொழியில் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் கையெழுத்து பெறவும் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.