ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடப்பதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான் மூலம் அமெரிக்கா கொடுத்தனுப்பிய அமைதி திட்டத்தை ஈரான் ஆய்வு செய்து வருவதாகக் கூறினாலும், கடற்படையில் மோதல் குறையவில்லை.
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலை முறியடித்த அமெரிக்க ராணுவம், ஈரானின் தளங்கள் மீது பதிலடி கொடுத்துள்ளது. இந்த பதற்றமான சூழலில் பேசிய அதிபர் டிரம்ப், இது ஒரு சிறிய மோதல் தான் என்றும், எந்த நேரத்திலும் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒருவேளை ஈரான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், அந்த நாடு மிகப்பெரிய பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ஈரானிடமிருந்து இன்று இரவுக்குள் பதில் வரும் என எதிர்பார்ப்பதாகவும், அவர்கள் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
