தென் கொரியாவின் தலைநகர் சீலில் நடைபெற்ற 62-வது பெக்சாங் கலை விருதுகள் விழாவில், பிரபல நடிகை ஷின் ஹியூன்-பின் சிவப்பு கம்பளத்தில் தடுமாறி விழுந்த சம்பவம் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

ஊதா நிற நீண்ட கவுன் அணிந்து தேவதை போல வந்த அவர், எதிர்பாராதவிதமாகத் தனது ஆடையிலேயே கால் சிக்கி கீழே விழுந்தார். இருப்பினும், அந்த இக்கட்டான சூழலில் பதற்றமடையாமல், கீழே அமர்ந்தபடியே வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே அந்தத் தருணத்தைக் கையாண்ட விதம் அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது.

உடனே எழுந்து புன்னகையுடன் கேமராக்களுக்கு போஸ் கொடுத்த அவரது தன்னம்பிக்கையை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

இந்த விருது விழாவில் பல்வேறு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ‘தி கிங்ஸ் வார்டன்’ படத்திற்காக பார்க் ஜி ஹூன் சிறந்த அறிமுக நடிகராகவும், சியோ சு பின் சிறந்த அறிமுக நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த இயக்குநராக யூன் கா யூன் விருது பெற்றார்.

“>

 

மேலும், இம் சி வான், சியோல் இன் ஆ, லிம் யூன் ஆ மற்றும் பார்க் ஜி ஹூன் ஆகியோர் நேவர் பிரபலம் விருதினை வென்றனர். விழாவில் நடந்த சிறு விபத்தையும் தனது புன்னகையால் நேர்மறையாக மாற்றிய நடிகை ஷின் ஹியூன்-பின்னின் செயல், விருதுகளை விடவும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.