கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் தெருநாய்கள் ஒரு சிறுவனைத் தாக்கிய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மூன்று சிறுவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென தெருநாய்கள் துரத்தத் தொடங்கின. இதில் மற்ற இரு சிறுவர்கள் தப்பித்து ஓடிவிட, மூன்று வயது சிறுவன் விராஜ் சந்தோஷ் மட்டும் நிலைதடுமாறி கீழே விழுந்தான்.
அப்போது ஒரு நாய் அச்சிறுவனின் காலைக் கவ்விப் பிடித்து, சுமார் 30 மீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு சிறுவனை மீட்க ஓடி வந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் ஓட்டுநரும், அக்கம் பக்கத்தினரும் கற்கள் மற்றும் குச்சிகளுடன் நாயைத் துரத்தியதால், அந்த நாய் சிறுவனை விட்டுவிட்டு ஓடியது. இந்தத் தாக்குதலில் சிறுவனின் முதுகு மற்றும் தொடையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
कर्नाटक के विजयपुरा में आवारा कुत्ते ने किया मासूम पर हमला, 30 मीटर तक बेरहमी से घसीटा pic.twitter.com/Xjlghf2MMG
— आजाद भारत का आजाद नागरिक (@AnathNagrik) May 6, 2026
“>
உடனடியாக சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறான். தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதற்கு உள்ளாட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோபத்துடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
