தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வாழ்த்துச் சொன்னதற்காக, சமூக வலைதளங்களில் தன்னை விமர்சித்தவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் மிகத் தெளிவாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

“நான் எந்தக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்பது என் கையில் இல்லை, ஆனால் நல்ல பெற்றோரிடம் பிறந்தது என் அதிர்ஷ்டம்; மற்றவர்களின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு அவர்களை முன்னேற்றுவதுதான் உண்மையான தலைமை என்று என் பெற்றோரும் ஆசிரியர்களும் எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“>

 

மேலும், ஒரு நாள் வாரிசு அரசியல், குடும்பம் மற்றும் சாதி பற்றிப் பேசாத நிலை உருவாக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அஸ்வின் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பதில் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.