தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) படைத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

ஆனால், அந்த வாழ்த்துகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன், “கங்கிராஜுலேஷன்ஸ் விஜய் அங்கிள்.. ஹேப்பி ஃபார் யூ!” என்று மழலை மாறாத குரலில் வாழ்த்துச் சொல்லி, தனது பியானோவில் ‘ராவணன் மவன்டா’ பாடலை மிக அற்புதமாக இசைத்துள்ளான்.

சிறுவனின் இந்த திறமையையும், அவன் காட்டிய அன்பையும் பார்த்த தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய்யின் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், இந்தச் சிறுவனின் ஸ்பெஷல் வாழ்த்து அனைவரது மனங்களையும் வென்றுள்ளது.

“உண்மையான அன்புக்கும், திறமைக்கும் ஊனம் ஒரு தடையல்ல” எனப் பாராட்டும் நெட்டிசன்கள், இந்தச் சிறுவனின் வீடியோவை அதிகளவில் பகிர்ந்து அவனது திறமையை உலகறியச் செய்து வருகின்றனர். அநேகமாக இந்த வீடியோ விரைவில் தளபதி விஜய்யின் கவனத்திற்கும் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.