தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) யாரும் எதிர்பார்க்காத வகையில் 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று முன்னணியில் உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் எழுச்சியைக் கண்டு இந்தியத் திரையுலகமே வியந்து வரும் நிலையில், பாலிவுட் இளம் நடிகர் டைகர் ஷெராஃப் விஜய்க்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “விஜய் சார், உங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் அடுத்த அத்தியாயம் இன்னும் வலிமையானதாக அமைய வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.