ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் பிரியான்ஷ் ஆர்யா அடித்த சிக்ஸர் பந்து பட்டு காயமடைந்த முதியவரை, அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா மற்றும் வீரர் பிரியான்ஷ் ஆகியோர் வீடியோ காலில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளனர். கடந்த செவ்வாயன்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது, பிரியான்ஷ் அடித்த பந்து நேராக ஸ்டேடியத்தில் இருந்த கிருஷ்ண்சந்த் என்ற பெரியவரின் முகத்தில் பலமாகத் தாக்கியது.

இதில் அவருக்கு ரத்தம் கொட்டியதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ள நிலையில், பிரீத்தி ஜிந்தா அவரிடம் பேசி நலம் விசாரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ காலில் பேசிய பிரியான்ஷ் ஆர்யா, “உங்களுக்கு அடிபட்டதைப் பார்த்தபோது நான் மிகவும் கவலையடைந்தேன்” என்று கூறினார்.
<a href=”http://

“>

அதற்கு அந்த முதியவர், “உங்கள் ஆசியால் உயிர் பிழைத்தேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். உடனே பிரீத்தி ஜிந்தா ஜாலியாக, “அடுத்த முறை நீங்கள் மேட்ச் பார்க்க வரும்போது உங்களுக்கு ஹெல்மெட் கொடுத்துப் போடச் சொல்கிறேன், அப்போதுதான் பாதுகாப்பாக இருப்பீர்கள்” என்று கிண்டலாகக் கூறி அவரைச் சிரிக்க வைத்தார்.

மேலும், தர்மசாலாவில் நடக்கவுள்ள பஞ்சாப் அணியின் அடுத்த போட்டிக்கு நேரில் வருமாறும் அந்தப் பெரியவருக்கு அவர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.