ஈரானுக்கு எதிரான போருக்கு ஆதரவு அளிக்காததால், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவது குறித்து பரிசீலித்து வருவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஜெர்மனியிலும் படைகளைக் குறைக்கப்போவதாக அவர் அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் தங்களுக்கு உதவத் தவறிய நேட்டோ கூட்டமைப்பு நாடுகளை டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்துப் பேசிய டிரம்ப், “இத்தாலி எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை, ஸ்பெயின் நாடும் மிக மோசமாக நடந்துகொண்டது” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

2025-ஆம் ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஜெர்மனியில் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் பணியில் இருந்தனர். தற்போது அவர்கள் அனைவரையும் திரும்பப் பெறுவது குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று டிரம்ப் உறுதியாகக் கூறியுள்ளார்.