விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துக் காட்டமாகப் பேசிய தமிழிசை, அவர் ஆன்மீகத் தேடலுக்குச் செல்லவில்லை, மாறாகத் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்புத் தளத்தைத் தேடித்தான் செல்லப்போகிறார் என எள்ளி நகையாடினார்.
மேலும், மே 4-ம் தேதி வரை விஜய் கனவு கண்டு கொண்டிருக்கட்டும் என்றும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உண்மை நிலை புரியும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
“அரசியல் என்பது வேறு, சினிமா என்பது வேறு” என்பதை விஜய் உணர்ந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த தமிழிசை, தவெக-வின் செயல்பாடுகள் தமிழக அரசியலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார். தமிழிசையின் இந்த அதிரடிப் பேச்சு தவெக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் இது பேசுபொருளாகியுள்ளது.
