அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு இரவு விருந்தில் எதிர்பாராத விதமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், அங்கிருந்த நபர் ஒருவர் எவ்வித சலனமும் இன்றி தனது உணவை தொடர்ந்து சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மற்ற விருந்தினர்கள் அனைவரும் உயிருக்கு பயந்து அலறியடித்துக்கொண்டு தரையில் படுத்து தங்களை பாதுகாத்துக் கொண்ட வேளையில், இந்த நபர் மட்டும் தனது இருக்கையை விட்டு நகரவே இல்லை.
மேலும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் அனைவரும் தரையில் அமரச் சொன்னபோது, “நான் தரையில் அமர்ந்தால் எனது புத்தம் புதிய ஆடைகள் அழுக்காகிவிடும்” என்ற வினோதமான காரணத்தைக் கூறி அவர் அசால்ட்டாக சாலட் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சுற்றிலும் பீதி நிலவிய போதும், மரண பயமே இல்லாமல் அவர் காட்டிய இந்த நிதானம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
My man pic.twitter.com/NKAoHKXciR
— Chris Stephens (@ChrisStephensMD) April 26, 2026
“>
இந்நிலையில் சிலர் அவரது தைரியத்தை வியந்து பாராட்டினாலும், பலரும் இது மிகவும் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற செயல் என்று விமர்சித்து வருகின்றனர். ஒரு சிறிய கவனக்குறைவு கூட உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் சூழலில், ஆடையில் கறை படிந்துவிடும் என்று கவலைப்பட்ட அந்த நபரின் மனநிலை அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
