உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஐடிஐ சாலைப் பகுதியில், பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவிகளை 2 இளைஞர்கள் பைக்கில் பின்தொடர்ந்து சென்று கிண்டல் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் எல்லை மீறிய அந்த இளைஞர்கள், ஒரு மாணவியின் கையைப் பிடித்து இழுத்து அநாகரீகமாக நடந்து கொண்டனர்.
இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய ஃபதேபூர் போலீசார், சிசிடிவி மற்றும் வைரல் வீடியோவை வைத்து அந்த இரண்டு இளைஞர்களையும் அதிரடியாகக் கைது செய்தனர்.
उत्तर प्रदेश : जिला फतेहपुर में बाइक सवार 2 लफंगों ने छात्राओं से खुलेआम छेड़छाड़ की, हाथ पकड़कर खींचने का प्रयास किया !!@bnetshukla pic.twitter.com/fhwmwLJEMR
— Sachin Gupta (@Sachingupta) April 20, 2026
அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காவல் நிலையத்தில் அந்த இளைஞர்கள் கைகளைக் கட்டிக்கொண்டு, “எங்களை மன்னித்துவிடுங்கள், இனிமேல் இப்படி ஒரு தவறைச் செய்ய மாட்டோம்” என நொண்டிக்கொண்டே கெஞ்சும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
“பெண்களிடம் வாலாட்டினால் இதுதான் கதி” என நெட்டிசன்கள் போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையைப் பாராட்டி வருகின்றனர்.
