வேலையிழந்து தவித்த தனது நண்பனுக்கு, அவன் மீண்டும் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காகத் தனது 37 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரையே பேக்கரி வைக்க கொடுத்து உதவியுள்ளார் ஒரு உண்மையான நண்பன். அந்த நண்பன் கொடுத்த காரை வைத்து, வேலை இழந்த நபர் ஒரு பேக்கரியைத் தொடங்கித் தனது வாழ்வாதாரத்தை மீட்டெடுத்துள்ளார். இக்கட்டான சூழலில் கை கொடுக்க ஒரு நண்பன் இருந்தால் எத்தகைய மலையையும் தாண்டி வரலாம் என்பதற்கு இந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.

​”இப்படிப்பட்ட நண்பர்கள் கிடைப்பதற்குப் பெரிய கொடுத்து வைத்திருப்பார் வேண்டும்; ஒருவேளை உங்களுக்கும் இப்படி ஒரு நண்பன் இருந்தால் அவர்களைக் கண்ணை இமை காப்பது போலப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று இந்தச் செய்தியைப் பகிரும் நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். பணத்தையும் பொருளையும் விடத் தியாகம் கலந்த நட்பே உயிருள்ளது என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பலரது இதயங்களைத் தொட்டு வைரலாகி வருகிறது.