மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சோஹெல் என்ற இளைஞர், தனது மோட்டார் சைக்கிளைக் கொண்டு ஒரு ரயிலை இழுக்க முயன்ற விபரீதச் செயல் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே எஸ்யூவி கார் ஒன்று ரயிலை இழுத்து கின்னஸ் சாதனை படைத்த வீடியோவை முன்மாதிரியாகக் கொண்டு, அதேபோன்ற ஒரு முயற்சியை இந்த இளைஞர் செய்துள்ளார்.

ரயிலின் முன்பகுதியில் தனது பைக்கை ஒரு கயிற்றால் கட்டி அவர் இழுக்க முயன்றபோது, பைக்கின் சக்கரம் ஓரே இடத்தில் சுழன்றதே தவிர ரயிலை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியவில்லை. இந்த ஆபத்தான சாகச வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தச் செயலால் ஆத்திரமடைந்த சமூக வலைதளவாசிகள், லைக்ஸ்களுக்காகவும் புகழுக்காகவும் இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
<a href=”http://

“>

ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் அதன் கட்டமைப்பு பகுதிகளில் அனுமதி இன்றி நுழைவதும், இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதும் தண்டனைக்குரிய குற்றம் எனப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். சம்பந்தப்பட்ட இளைஞர் மீது ரயில்வே பாதுகாப்புப் படை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் எதிர்காலத்தில் இது போன்ற விபரீத முயற்சிகளை மற்றவர்கள் தவிர்க்க முடியும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.