சமூக வலைதளங்களில் சில நொடிகள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் செய்யும் விபரீதச் செயல்கள் நாளுக்கு நாள் எல்லை மீறிச் செல்கின்றன. அந்த வகையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சோஹைல் என்ற இளைஞர், ஓடிக்கொண்டிருக்கும் ரயிலை தனது மோட்டார் சைக்கிளில் கட்டி இழுக்க முயன்ற வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
சமீபத்தில் MG Majestor என்ற புதிய எஸ்.யூ.வி கார், 400 டன் எடை கொண்ட ரயிலை இழுத்து கின்னஸ் சாதனை படைத்திருந்தது. அந்தச் சாதனையைத் தனது சாதாரண பைக்கில் செய்ய முயன்ற சோஹைல், தண்டவாளத்தில் நின்றிருந்த ரயிலின் முன்பக்கத்தில் கயிற்றைக் கட்டி, பைக்கை முறுக்கியுள்ளார். ஆனால், பைக் டயர் தேய்ந்து புகை வந்ததே தவிர, ரயில் ஒரு இன்ச் கூட நகரவில்லை.
After the MG Majestor successfully pulled a train and set a Guinness World Record, Rider Sohel from West Bengal attempted to surpass it by pulling an entire train with his bike 🙂
While he couldn’t break the record, there’s a strong possibility that this act was carried out… pic.twitter.com/HYNUVSieVR
— Trains of India 🇮🇳 (@trainwalebhaiya) April 16, 2026
இந்தச் செயல் வெறும் முட்டாள்தனம் மட்டுமல்ல, ரயில்வே சட்டப்படி மிகப்பெரிய குற்றமாகும். ரயில்வே தண்டவாளம் என்பது மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதி. அங்கு அனுமதியின்றி நுழைந்து இத்தகைய ஆபத்தான ஸ்டண்ட்களை செய்வது உயிருக்கே ஆபத்தாக முடியும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
“லைக்குகளுக்காகத் தண்டவாளத்தில் விளையாடாதீர்கள்” என நெட்டிசன்கள் அந்த இளைஞரைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இளைஞர் மீது ரயில்வே பாதுகாப்புப் படை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டத்தைப் மீறிச் செயல்பட்ட சோஹைலுக்குத் தக்க தண்டனை கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
