விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராத விதமாகப் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது பட்டாசுகள் வரிசையாக வெடித்துச் சிதறியதும், தீ கொழுந்துவிட்டு எரியும் காட்சிகளும் பார்ப்பவர்களைப் பீதி அடையச் செய்துள்ளன.

விபத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் ஊழியர்கள் பயந்து அலறியடித்துக்கொண்டு ஓடும் காட்சிகள் தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காணொளியாக வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் காயங்கள் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.