தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரைப் பார்க்கத் திரண்டிருந்தனர். அப்போது பிரச்சார வாகனத்தில் சென்று கொண்டிருந்த விஜய்யைப் பார்த்த தொண்டர் ஒருவர், மிகுந்த பாசத்துடன் ஒரு இளநீரை அவரிடம் நீட்டினார். எவ்வித தயக்கமும் இன்றி, பாதுகாப்பைப் பற்றி யோசிக்காமல் அந்த இளநீரை வாங்கி விஜய் குடித்தது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
"தலைவா தாகமா இருக்கும் இத குடிங்க.."
தொண்டர் அன்போடு கொடுத்த இளநீரை வாங்கி யோசிக்காமல் குடித்த விஜய்.!#Tirunelveli | #TVKVijay | #TVKCampaign | #Election2026TN | #PolimerNews pic.twitter.com/0BUtfRCKu2
— Polimer News (@polimernews) April 8, 2026
தன்னுடைய தொண்டர்கள் மீது விஜய் வைத்திருக்கும் நம்பிக்கையும், எளிமையான அணுகுமுறையும் இந்தச் செயலின் மூலம் வெளிப்பட்டுள்ளதாக ரசிகர்கள் சிலாகிக்கின்றனர். “தலைவா தாகமா இருக்கும்.. இத குடிங்க” என அந்தத் தொண்டர் பாசத்தோடு கத்தியது அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது இந்த நெகிழ்ச்சியான இளநீர் வீடியோ சமூக வலைதளங்களில், குறிப்பாக எக்ஸ் (X) தளத்தில் காட்டுத்தீ போல வைரலாகி வருகிறது.
