மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போரினால் உலகமே ஏற்கனவே பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டதால் பல நாடுகளில் ஊரடங்கு போன்ற சூழல் நிலவுவதுடன், இந்தியாவிலும் வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்ந்து ஹோட்டல் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பதற்றமான சூழலுக்கு மத்தியில், சீனாவில் பரவி வரும் ஒரு புதிய நோய் உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் மெல்ல மீண்டு வரும் நிலையில், சீனாவில் தற்போது பரவி வரும் இந்தத் தொற்று விலங்குகளை வேகமாகத் தாக்கி வருகிறது.

இந்த நோயைக் கட்டுப்படுத்த சீன அரசு தற்போது போர்க்கால அடிப்படையில் விலங்குகளைக் கொல்லும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், தனது நாட்டின் எல்லைகளையும் மூடி அதிரடி காட்டியுள்ளது. செரோடைப் போன்ற அறிகுறிகளைக் கொண்ட இந்த நோய் வெளிநாட்டிலிருந்து சீனாவிற்குள் நுழைந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தற்போதைக்கு மனிதர்களுக்கு இந்தத் தொற்று ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்றாலும், வடமேற்கு சீனாவில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான தடுப்பூசிகள் கைவசம் இருப்பதாக சீனா கூறினாலும், கொரோனாவைப் போலவே இதுவும் உலகளாவிய அச்சுறுத்தலாக மாறிவிடுமோ என்ற கவலை சர்வதேச அளவில் எழுந்துள்ளது.