தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில் அவருக்கு எதிராகப் பிக் பாஸ் புகழ் ஜூலி தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. விஜய்யை ஒருமையில் விளித்துப் பேசியதுடன் பெரம்பூர் தொகுதியில் அவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் ஜூலி அறிவித்திருந்தார்.
ஜூலியின் இந்த வரம்பு மீறிய பேச்சால் கடும் அதிருப்தி அடைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் அவருக்கு எதிராகக் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். திமுகவுடன் இணைந்து கொண்டு ஒரு சில திரைப் பிரபலங்கள் விஜய்யைத் திட்டமிட்டுக் குறிவைப்பதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
BigBoss la அடிச்சு தொரத்துன நாய் 🐶 அவ..!😡
அவ என்ன பெரிய Haira..!😬
கிட்னி திருடி பெரம்பூர் பக்கம் போவதை தவிர்ப்பது நல்லது..!👍 pic.twitter.com/ln6jPMioVy
— 🐠🆁🅰🅹🅰.🅹🅰🆈🍁 (@spjraja) March 30, 2026
இது தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண் தொண்டர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் தற்பொழுது வேகமாகப் பரவி வருகிறது. அதில் பெண்களுக்கு எதிரான பல்வேறு பாலியல் குற்றங்கள் நடைபெற்ற போது மௌனம் காத்த ஜூலி தற்பொழுது விளம்பரத்திற்காக விஜய்யைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக அவர் சாடியுள்ளார்.
கடந்த காலங்களில் ஜூலி மீது சுமத்தப்பட்ட பல்வேறு புகார்களைச் சுட்டிக்காட்டியுள்ள அந்தப் பெண் தொண்டர் ஒருமையில் பேசுவதை ஜூலி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார். ஏற்கனவே விஜய் ரசிகர்கள் தன்னைத் தாக்குவதாகப் புகார்களைக் கூறி வரும் ஜூலிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் இடையேயான இந்த மோதல் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
