திமுக அரசு ஒரு மிகப்பெரிய “மோசடி கட்சி” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக புதிய தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியமே இல்லை என்றும், ஏனெனில் 2021-ல் அவர்கள் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 439-ஐ இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். நிறைவேற்றப்படாத திட்டங்களைக் கூட 100% முடித்துவிட்டதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்வதாலேயே திமுகவை ஒரு மோசடி கட்சி என்று அழைப்பதாக அவர் விளக்கியுள்ளார்.

​முக்கியமாக, குடும்பத் தலைவிகளுக்கு வழங்க வேண்டிய சிலிண்டர் மானியம் ₹100 என்னவானது? மற்றும் 5.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை தருவதாகச் சொன்ன வாக்குறுதி எங்கே போனது? என அடுக்கடுக்கான கேள்விகளை அன்புமணி எழுப்பியுள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், திமுகவின் கடந்த கால வாக்குறுதிகளை முன்வைத்து பாமக தலைவர் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.