தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஒரு நடிகராக இருக்கும் வேட்பாளரின் திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற வேண்டுமா என்ற சுவாரசியமான கேள்வி எழுப்பப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியலில் கால்பதித்துள்ள நிலையில் இக்கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. இது குறித்துப் பதிலளித்த தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், “இது நல்ல கேள்வி” என்று பாராட்டியதுடன், இத்தகைய சூழல் முதன்முறையாக நடப்பதால், இது குறித்து இந்தியத் தேர்தல் கமிஷனிடம் ஆலோசித்துவிட்டுப் பிறகு பதிலளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.