சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் உள்ளார். இதுவரை சிஎஸ்கே அணிக்காக 186 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 140-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக வெய்ன் பிராவோ 116 போட்டிகளில் விளையாடி 140 விக்கெட்டுகளை எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
தற்போது சிஎஸ்கே அணிக்காக 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த வீரர்களாக ஜடேஜா மற்றும் பிராவோ ஆகிய இருவரும் மட்டுமே திகழ்கின்றனர்.இந்த பட்டியலில் 95 விக்கெட்டுகளுடன் அஸ்வின் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து தீபக் சஹார் 76 போட்டிகளில் 76 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதேபோல் ஆல்பி மார்கெலும் 76 விக்கெட்டுகளுடன் இந்தப் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். சிஎஸ்கே அணியின் வெற்றிகளில் இந்தப் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் ஜடேஜா தற்போது ராஜஸ்தான் அணிக்காக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
