அமேசான் எலக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் விற்பனையில் iQOO 15R ஸ்மார்ட்போன் அதிரடியான விலைக் குறைப்பில் கிடைக்கிறது. ரூ. 53,999க்கு அறிமுகமான இந்த போனை, தற்போது வங்கிச் சலுகைகள் மூலம் ரூ. 13,001 தள்ளுபடி பெற்று ரூ. 40,998 என்ற விலையில் வாங்க முடியும்.
இது தவிர, பழைய போன்களை மாற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் வட்டி இல்லாத மாத தவணை முறை போன்ற கூடுதல் வசதிகளும் வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த விலையில் இந்த பிரீமியம் போனைப் பெற ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.சிறந்த தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட இந்த போனில் 6.59 அங்குல AMOLED திரையும், மிக வேகமான ஸ்நாப்டிராகன் 8 ஜென் 5 செயலியும் பொருத்தப்பட்டுள்ளது.
இதில் உயர்தரமான 50 மெகாபிக்சல் சோனி மெயின் கேமரா மற்றும் செல்ஃபிக்காக 32 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது. குறிப்பாக, நீண்ட நேரம் நீடிக்கும் 7600 mAh பேட்டரியுடன் 100W வேக சார்ஜிங் வசதி மற்றும் தண்ணீர், தூசியால் பாதிக்கப்படாத IP68/IP69 பாதுகாப்புத் தரமும் இதில் உள்ளது.
மெல்லிய கண்ணாடி இழை வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பான 3D அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற வசதிகள் இதற்கு ஒரு தனித்துவமான தோற்றத்தைத் தருகின்றன.
