டி20 உலகக்கோப்பை தொடர் நடந்து வரும் வேளையில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், நியூசிலாந்து வீரர்களுக்கு இந்திய ஆடுகளங்களின் தன்மை மற்றும் இந்திய வீரர்களின் பலவீனங்கள் குறித்து அஸ்வின் ரகசிய ஆலோசனைகளை வழங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
“சொந்த நாட்டு அணிக்காக விளையாட வேண்டிய நேரத்தில், எதிரணிக்கு இப்படி ஐடியா கொடுக்கலாமா?” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அஸ்வினை வறுத்தெடுத்து வருகின்றனர்.
Looks like Ashwin badly wants New Zealand to win this World Cup tonight, Other days he will do such things in Hindi or Tamil. 🫣 #INDVNZ #T20WorldCup pic.twitter.com/QvPoqZf7yJ
— Nibraz Ramzan (@nibraz88cricket) March 8, 2026
ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்களுடன் நெருக்கமாக இருக்கும் இந்திய வீரர்கள் மீது விமர்சனங்கள் உள்ள நிலையில், அஸ்வின் நியூசிலாந்து அணிக்கு உதவுவது போலத் தோன்றும் இந்த வீடியோ இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒரு சாதாரண நேர்காணலா அல்லது உண்மையிலேயே அஸ்வின் டிப்ஸ் கொடுக்கிறாரா என நெட்டிசன்கள் பட்டிமன்றமே நடத்தி வருகின்றனர்.
