டெல்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சாதாரண மண்ணை வைத்து ஒரு நாளில் 2200 ரூபாய் வரை சம்பாதிக்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட முல்தானி மெட்டி எனப்படும் மண்ணை நன்றாக அரைத்து பொடியாக்கிய அந்த இளைஞர் அதில் மஞ்சள் மற்றும் இயற்கை வண்ணங்களைக் கலந்து இயற்கை ஹோலி வண்ணப்பொடி என்று பெயரிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Bhaiya JI (@deluxebhaiyaji)

பின்னர் இதனை அழகான பாட்டில்களில் அடைத்து கவர்ச்சிகரமான ஸ்டிக்கர்களை ஒட்டி டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் விற்பனை செய்துள்ளார். வெறும் ஒரு நாளில் மட்டும் அவருக்கு இரண்டாயிரத்து இருநூறு ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதனைப் பார்த்த இணையதளவாசிகள் பலரும் அந்த இளைஞரின் வியாபாரத் திறமையைப் பாராட்டி வரும் நிலையில் ஒரு சிலர் பாட்டில் மற்றும் மின்சாரச் செலவு போக இவ்வளவு லாபம் கிடைக்குமா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.