திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் டீக்கடை ஒன்றின் அருகே நின்றிருந்த இரண்டு பேர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி களக்காடு மெயின் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பத்து கிராம மக்களுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.
