தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை விறுவிறுப்படைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகளைக் கேட்டுப் பிடிவாதம் காட்டி வருகிறது.
ஆரம்பத்தில் 39 தொகுதிகள் மற்றும் ‘ஆட்சியில் பங்கு’ போன்ற கோரிக்கைகளை முன்வைத்த காங்கிரஸிடம், திமுக தலைமை 25 தொகுதிகளுக்கு மேல் ஒரு சீட் கூட கூடுதலாகத் தர முடியாது என்று கறாராகக் கூறிவிட்டது.
இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே சிறு மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், சோனியா காந்தியின் தலையீட்டிற்குப் பிறகு கூட்டணி உறுதியாகியுள்ளது.
தற்போது ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையைக் கைவிட்டுள்ள காங்கிரஸ், கௌரவமான எண்ணிக்கையாக 27 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
ராஜ்யசபா சீட் தர திமுக ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், கூடுதல் தொகுதிகள் கிடைக்குமா என்பது இன்னும் இழுபறியாகவே உள்ளது.
2026 தேர்தலுக்கு வலுவான கூட்டணி அவசியம் என்பதால், இரு கட்சிகளும் விரைவில் ஒரு சுமுகமான முடிவை எட்டும் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
