உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள லஹுராபிர் பகுதியில், ஜட்டி உள்ளிட்ட உள்ளாடைகள் விற்கும் கடை ஒன்றில் சுமார் 10,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 24 அன்று மாலை கடைக்கு வந்த மூன்று பெண்கள், அங்கிருந்த ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பியுள்ளனர். அப்போது சிசிடிவி காட்சிகளின்படி, ஒரு பெண் அங்கிருந்த பொருட்களைத் திருடி தனது பையில் மறைத்து வைப்பது தெரியவந்தது.

பொருட்கள் குறைந்திருப்பதை ஸ்டாக் சரிபார்க்கும் போது உணர்ந்த கடை உரிமையாளர் சுதீப் சிங், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சுனிதா சோனி என்ற பெண் முக்கியமானவர்.

இவர் உள்ளூர் வர்த்தகர் சங்கத் தலைவராகவும், மாநகராட்சியின் முன்னாள் பிராண்ட் அம்பாசிடராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த புகாரை அவர் மறுத்துள்ளார்; தனது உறவினர்களுடன் கடைக்குச் சென்றபோது தமக்குத் தெரியாமல் இந்தத் தவறு நடந்திருக்கலாம் என்றும், அதற்குரிய பணத்தைச் செலுத்தத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

“>

 

தற்போது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.