தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேலூர் மாநாட்டில் பேசிய ‘குட்டி ஸ்டோரி’ மற்றும் ஜல்லிக்கட்டு காளை குறித்த உதாரணம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிக் பாஸ் ஜூலி வெளியிட்ட வீடியோவில், விஜய்யின் பேச்சு ரசிகர்களை தவறாக வழிநடத்தும் என்றும், ஜல்லிக்கட்டு போராட்டத்தை மீண்டும் நடத்த திராணி இல்லை என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். ஜூலியின் இந்த கருத்துக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகர் பழனியப்பன் ஜூலிக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது பலருடைய கூட்டு முயற்சி என்றும், ஏதோ ஜூலி மட்டுமே போராடி பெற்றுத்தந்தது போல பேசக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், விஜய்யின் திறமையைப் பாராட்டிய அவர், ஒருவரை விமர்சிக்க வேண்டுமானால் அவரை விட ஏதாவது சாதித்திருக்க வேண்டும் என்றும், சமீபத்தில் திருமணமான ஜூலி தனது வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இந்த மோதல் 2026 தேர்தலுக்கு முன்னதாக சமூக வலைதளங்களில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.